கனத்த நாற்றத்துக்கிடையே மண்...
கலைத்தே தேடுகின்றோம்....
தேடுவது எதுவாகிலும்
தேடலின் விடியல்
தெருவோர குடிலிலே ....
பழைய பல்பு ,பிளாஸ்டிக் பை,அழுகிய குப்பை...
எதுவாகிலும்......

தேடியதில் மிச்சம் என்னவோ
நெலிந்த பாத்திரங்களும் ....
நலிந்த வாழ்வும் தான்....
தேடித்தேடியே வாழ்வை....
தொலைத்தவர்கள் நாங்கள் ....!!!!!

உனக்கும் எனக்குமாய்
இடைவெளி அதிகரித்த
ஓர் மழைக்கால இரவில்
குடைக் கைப்பிடியின்
பிசுபிசுப்பின் ஊடே
நீர் மிதித்து நடக்கிறேன்!

முன்னொரு மழைநாளில்
நம் நெருக்கத்தை கண்ட
தவளை இன்று
கேலியாய் கத்துகிறது!

இலையுடன் உறவுக்கொள்ள
பாய்ந்து வந்த ஒரு
மழைத்துளியின்
தோல்வியின் ஊடே...
நம் பிரிவிற்கான காரணமும்
உன் நினைவும் நழுவ
மெல்லிய வெற்றிடம் ஒன்று
சன்னமாய் வந்து
மனம் நிரப்புகிறது!

பலிபீடம்

பலிபீடத்தில்
வரிசையாய் ஆடுகள்...
என்ன கேட்கும்
இறந்தபிறகு
இறைவனிடத்தில்?!!!

Newer Posts Home

Blogger Template by Blogcrowds