காமத்தின்
நாட்டிய நிழல்
கண்டு
நடுங்கி நிற்கிறது
இருள்!

அறை முழுதும்
வியாபித்திருந்த
நெருக்கத்தில்
கசியும் கதவிடுக்கின் ஊடே
திரும்பிச் செல்கிறது
ஒளி!

கட்டிலின் கால்கள்
மட்டுமே அறிந்த
காமத்தின் வேகத்தில்
நிலைகுத்தி நிற்கிறது
பல்லி!

தெறித்துச் சிதறிய
வியர்வையும்
விரவிக் கிடந்த
மணமும்
ஆனந்த களிக்கூர்கின்றன!

கொதித்து எழும்
எரிமலைகளுக்கிடையே
உருகி வழிகிறது
பனி!




பாலைவனத்தில்
தவறாய் துளிர்த்து விட்ட
செடி என் காதல்!

உன்
ஏளனப்பார்வை
உயிர்த்தின்னும்
வெக்கை!
குறும்புன்னகையோ
பெரும் மழை!
மழை வேண்டாம்
தூறலையாவது காட்டிவிடு!

உன்
மௌனத்தின் ஒவ்வொரு
நொடியிலும் குறை
பிரசவங்களாகிப் போகின்றது
என் காதல்!

என் கதறல்கள்
உணவுக்காக கத்தும்
காக்கை குஞ்சுகளை போன்றது
உயிர் பிச்சையாவது
கொடுத்துவிடு!

தேவதையின்
வரத்திற்காக
பின்தொடரும் யாகம்
செய்கிறேன்.
இல்லை என்றாவது
சொல்லிவிடு.
அப்படியாவது முற்று பெறட்டும்
என் காதல்!

காமம் தலைக்கேறி
மூளையை கிழிக்க
சிதறிய ரத்தம்
மூளை தழுவி
நரம்பில் பாய்ந்து கொண்டிருக்கிறது...

இதழ் கடித்து
முலை கசக்கி
சதைத் தின்ன
சர்ப்பத்தின் நாவில்
சிக்குண்ட
தவளை அவள்...

உள் நுழைத்து
உடல் பரவி
களி நர்த்தனம் புரிய
சிதறிய கண்ணீர்த்
துளியில்
நிர்வாணமாய் நான்...

விரவி கிடந்த
ஆலமரத்தின் இலை நுனி
பனித்துளியில் அமர்ந்து
சிரித்துக் கொண்டிருக்கிறான்
சிவன்!!!

Newer Posts Older Posts Home

Blogger Template by Blogcrowds