காமத்தின்
நாட்டிய நிழல்
கண்டு
நடுங்கி நிற்கிறது
இருள்!

அறை முழுதும்
வியாபித்திருந்த
நெருக்கத்தில்
கசியும் கதவிடுக்கின் ஊடே
திரும்பிச் செல்கிறது
ஒளி!

கட்டிலின் கால்கள்
மட்டுமே அறிந்த
காமத்தின் வேகத்தில்
நிலைகுத்தி நிற்கிறது
பல்லி!

தெறித்துச் சிதறிய
வியர்வையும்
விரவிக் கிடந்த
மணமும்
ஆனந்த களிக்கூர்கின்றன!

கொதித்து எழும்
எரிமலைகளுக்கிடையே
உருகி வழிகிறது
பனி!

3 Comments:

 1. புலவன் புலிகேசி said...
  காமத்தின் விவரிப்பு அருமை...
  சுசி said...
  நல்லா இருக்கு...

  கவிதை மட்டுமில்ல புது வீடும்.
  இளவட்டம் said...
  நன்றி புலவன் புலிகேசி,தொடர் வாசிப்பிற்கும்.

  நன்றி சுசி. புது வீடு?

Post a CommentNewer Post Older Post Home

Blogger Template by Blogcrowds