பாலைவனத்தில்
தவறாய் துளிர்த்து விட்ட
செடி என் காதல்!

உன்
ஏளனப்பார்வை
உயிர்த்தின்னும்
வெக்கை!
குறும்புன்னகையோ
பெரும் மழை!
மழை வேண்டாம்
தூறலையாவது காட்டிவிடு!

உன்
மௌனத்தின் ஒவ்வொரு
நொடியிலும் குறை
பிரசவங்களாகிப் போகின்றது
என் காதல்!

என் கதறல்கள்
உணவுக்காக கத்தும்
காக்கை குஞ்சுகளை போன்றது
உயிர் பிச்சையாவது
கொடுத்துவிடு!

தேவதையின்
வரத்திற்காக
பின்தொடரும் யாகம்
செய்கிறேன்.
இல்லை என்றாவது
சொல்லிவிடு.
அப்படியாவது முற்று பெறட்டும்
என் காதல்!

6 Comments:

 1. புலவன் புலிகேசி said...
  //உன்
  மௌனத்தின் ஒவ்வொரு
  நொடியிலும் குறை
  பிரசவங்களாகிப் போகின்றது
  என் காதல்!//


  காதல் வழிகிறது...வாழ்த்துக்கள்.
  சுசி said...
  //பாலைவனத்தில்
  தவறாய் துளிர்த்து விட்ட
  செடி என் காதல்!//

  ஆரம்பமே அசத்தல்.... அருமை இளவட்டம்.
  இளவட்டம் said...
  நன்றி புலவன் புலிகேசி!
  இளவட்டம் said...
  சுசி மிக்க நன்றி!
  கலகலப்ரியா said...
  காதல் மழையில் நனைந்து....! நல்லா இருக்கு..!
  இளவட்டம் said...
  மிக்க நன்றி பிரியா.

Post a CommentNewer Post Older Post Home

Blogger Template by Blogcrowds