மறு ஒருமுறை
மனம் ஏங்குகிறது
மழை உனை ரசித்த
இந்நாளுக்காக !

பொல்லாத விழிகள் கொண்டு
எனது மௌனத்தை
விமர்சித்து சென்றாய்
நான் சிலையானேன் அங்கேயே !

விழிகள் மூடி
யாசிக்க தொடங்குகிறேன்
மறுமொருமுறை
இதே மழை நாளுக்காக !

- ஆறுமுகம் முருகேசன்.

சிகரெட் புகையுடன் தேநீரையும் பருகிக் கொண்டிருந்த ஓர் அதிகாலை மழை நாளில் தீராத அழகுடன் நடந்து வந்தாய்.உன் உடல் தழுவிய மழைத்துளிகள் மலர்துளிகளாய் மாற,ஆழ்நிலை தியானத்தில் இருந்த எனது வியர்வை சுரப்பிகள் சூடேறத் துவங்கியிருந்தன.இதழ் மூடியிருந்த சாலையோர ரோஜாக்கள் ஆச்சர்யத்தில் மலரத் துவங்க,மலர்ந்து இருந்தவைகளோ மோட்சத்தை எய்திருந்தன.உடல் நனைத்திருந்த மழைத்துளிகள் துணையோடு வறண்ட நாவுடன்,

"மழை வருவதாய் இருந்தால் இனி வெளிவருவதை நிறுத்தி விடு " என்றவனை

விழிகள் விரிய, சிறிது மிரட்சியுடன், "ஏன்?" என்றாய்.

"ஊரெங்கும் பொழிய வேண்டிய மழை முழுதும் உன் மீது பொழிவதை பார்.இந்நிலை நீடித்தால் நீ செல்லும் இடமெங்கும் வெள்ளப்பெருக்கும், மற்ற இடங்களில் வறட்சியும் ஏற்பட வாய்ப்புண்டு."

கண்ணில் புன்னகையையும்,உதட்டில் கோபத்தோடும்,"ஏய்! மிஸ்டர்,என்ன பேசுறீங்க?என்ன வேண்டும் உங்களுக்கு?" என்றாய்.

"உன் நட்பு வேண்டும்.

எதற்கு?

உன் கண்ணின் கதிர்கள் என் கவனம் கலைக்கின்றன.கனத்த முலைகளோ என்னை மூர்ச்சையடைய வைக்கின்றன.நீ இதழ் நனைக்கும் தருணங்களில் என் உயிர் உறிஞ்சப்படுகிறது.உன்னால் ஓர் உயிர் போகலாமா?அதனால்தான் சொல்கிறேன் என்னை காதலித்து விடு.

என்ன?நட்பு வேண்டும் என்றாய்.இப்போது காதலிக்கச் சொல்கிறாய்.

நட்புதான் வேண்டும்.இலவச இணைப்பாய் உன் காதலையும் தந்து விடு.

மாட்டேன் என்றால்?

தினம் இருகவிதைகள் எழுதி உனக்கு தபால் செய்ய நேரிடும்.

அய்யோ.. அதற்க்கு உன் நட்பே மேல்.மீண்டும் சொல்கிறேன் நட்பு மட்டும்தான்.இலவச இணைப்பு எல்லாம் இல்லை." என்றாய் காதலை மறைத்தபடி.

மலர்ந்திருந்த சாலையோர கூடை ரோஜாக்கள் பறக்கத் துவங்கியிருந்தன.

கரையோடு அலை உறவு கொண்டிருந்ததைக் கண்ட சிறு நண்டு நாணத்தில் ஓடி ஒளிந்து கொண்ட பின் ஓர் மாலை நேரத்தில் உன்னோடு அமர்ந்திருந்தேன்.

"ஒரு கவிதை சொல்.

என்ன திடீரென்று?உனக்குத்தான் என் கவிதைகள் பிடிக்காதே.

கவிதை எழுதுவேன் என்று பிற்றிக் கொள்கிறாயே.அப்படி என்னதான் எழுதுகிறாய் என்று பார்க்க வேண்டாமா?

ம்..என்றபடி சொல்லத்துவங்கியிருந்தேன்

கவிதை சொல் என்கிறாய்!
கண்மூடி தியானிக்கிறேன்
காதலாய் நீ
காமமாகவும் நீ
காதலுக்கு நீ
என் காமத்துக்கு கவிதை...

பூ வாடியது கண்டு
இதழ் குவிக்கிறாய்
வாடிப் போகிறேன்
நான்...

இப்பூவிற்கு வாசம்
இல்லை என்கிறாய்
நீ முகர்ந்துவிட்டாய்
அல்லவா இனி
வாசம் வந்து விடும்...

இறுதியாய்...

காதலித்து விடு...
இல்லையெனில்
இக்கடலுக்குள் தள்ளி விடு
மிதந்து கொண்டிருக்கும்
என் காதலை
கவிதையோடு கலந்து விடு!

என்ற என்னை புதுவிதமாய் உற்று பார்த்தபடி "இப்போது உன்னை காதலிப்பதாக சொன்னால் என்ன செய்வாய்?" என்றாய்.
"முழு நிர்வாணாமாய் சில்லிட்டு நிற்கும் அதிகாலை இலைமேல் பனித்துளியின் உள் இழுத்துச் சென்று அழுந்த முத்தமிடுவேன்".என்றவனை பொங்கி வழிந்த காதலுடன் உதட்டுடன் உயிர் உறிஞ்சியபடி முத்தமிடத் தொடங்கி இருந்தாய்.ஆர்ப்பரித்து அடங்கி கொண்டிருந்தது கடல்.

14 Comments:

  1. Unknown said...
    "முழு நிர்வாணாமாய் சில்லிட்டு நிற்கும் அதிகாலை இலைமேல் பனித்துளியின் உள் இழுத்துச் சென்று அழுந்த முத்தமிடுவேன்".என்றவனை பொங்கி வழிந்த காதலுடன் உதட்டுடன் உயிர் உறிஞ்சியபடி முத்தமிடத் தொடங்கி இருந்தாய்.ஆர்ப்பரித்து அடங்கி கொண்டிருந்தது கடல்."

    முழுநீள காதல் காட்சிகள் பிரமிக்க வைக்குது .. கதைய படிச்சவுடனே எனக்கும் காதலிக்கலாம்னு தோணுது..

    ஆமா இவ்வளவு அழகா கதை எழுதிட்டு எதுக்கு என் கவிதையை மேலே போட்டு வெச்சுருக்க.. , திருஷ்டி படாம இருக்கவா..!! :-)
    சுசி said...
    புனைவு மாதிரி தெரியல.

    நல்லா இருக்கு.
    புலவன் புலிகேசி said...
    கவிதை போல் ஒரு கதை...படிக்கும் பொழுது ஒரு சிறு புன்னகை வழிந்தது....அருமை நண்பரே
    aazhimazhai said...
    உன் கண்ணின் கதிர்கள் என் கவனம் கலைக்கின்றன.கனத்த முலைகளோ என்னை மூர்ச்சையடைய வைக்கின்றன.நீ இதழ் நனைக்கும் தருணங்களில் என் உயிர் உறிஞ்சப்படுகிறது.உன்னால் ஓர் உயிர் போகலாமா?அதனால்தான் சொல்கிறேன் என்னை காதலித்து விடு.

    ரொம்ப நல்ல இருக்கு !!!! உணர்த்து வாசித்தேன் நான் ....... கவிதையை நீங்க கோர்த்த வரிகளை.. உதிர்ந்த வார்த்தைகளாய் காகிதத்தில் என்றோ படித்த நிகழ்வுகள் ரணத்தின் எச்சங்களாய் என் நினைவினுள் .....
    பூங்குன்றன்.வே said...
    ரசித்து படித்த பதிவு..உங்களுக்கு எழுதும் கலை தெரிந்திருக்கிறது.. வாழ்த்துக்கள்.
    இளவட்டம் said...
    ரொம்ப நன்றி ஆறு.

    ///திருஷ்டி படாம இருக்கவா..!! :-)///

    நம்ம எழுதுறது எல்லாமே அப்படித்தான்.
    இளவட்டம் said...
    உண்மைதான் சுசி.
    முதல் முயற்சிதானே.
    ரொம்ப நன்றி.

    மிக்க நன்றி புலவன் புலிகேசி.
    இளவட்டம் said...
    மிக்க நன்றி ஆழிமழை.



    ///ரசித்து படித்த பதிவு..உங்களுக்கு எழுதும் கலை தெரிந்திருக்கிறது..///

    அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பாஸ்.சும்மா கிறுக்கறது.
    புலவன் புலிகேசி said...
    நண்பரே என்னுடைய இந்த வார டரியலில் உங்களை அறிமுகம் செய்திருக்கிறேன்.http://pulavanpulikesi.blogspot.com/2009/12/19-09.html
    இளவட்டம் said...
    நன்றி!நன்றி!நண்பரே!
    sangeetha said...
    Its Nice ...
    இளவட்டம் said...
    Thanks Sangeetha.
    அன்புடன் மலிக்கா said...
    /விழிகள் மூடி
    யாசிக்க தொடங்குகிறேன்
    மறுமொருமுறை
    இதே மழை நாளுக்காக/

    மழைகாதலியாய் நானும் மழையை மறுமுறை வரவேற்கிறேன்..
    மிக அருமையான க[வி]தை...

    http://niroodai.blogspot.com
    இளவட்டம் said...
    நன்றி மல்லிகா!

Post a Comment



Newer Post Older Post Home

Blogger Template by Blogcrowds