பனி படர்ந்த பாலை!

வறட்சியின் நிமித்தமாய்
உயிர் விட்டிருந்த
அச்சூன்யமிக்க வனாந்திரத்தில்
விருட்சம்
பலக்கண்டிருந்த
ஓர் ஆலமரம்
திக்கற்று
நின்று கொண்டிருந்தது!

நெடுந்தூர பயணத்தின்
முடிவில்
தன் பிறப்பிடம்
காண வந்திருந்த
காகம்
பழுப்பேறிய அதன்
நிலைக்கண்டு
பெருங்குரலெடுத்துக் கதறத்
துவங்கியது!

பெருக்கெடுத்து ஓடிய
கண்ணீர்த்துளிகள்
உழன்ற நாவின் வழியே
கிழவனின் விரல்களை ஒத்த
வேர்களை ஆதரவாய்த்
தழுவிச் செல்ல
அதன் நூற்றாண்டுகால
பசுமையான நினைவுகள்
கரையத் துவங்கியிருந்தன!

4 Comments:

 1. aazhimazhai said...
  ரொம்ப நல்லா இருக்கு !!!
  இளவட்டம் said...
  நன்றி ஆழிமழை!!!!!
  ஆறுமுகம் முருகேசன் said...
  கண்ணீர்த்துளிகள் உழன்ற நாவின் வழியே , கிழவனின் விரல்களை ஒத்த
  வேர்களை/ impressed lot..

  மிக அற்புதமான ஒரு படைப்பு...

  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மச்சி ..
  இளவட்டம் said...
  Thanksda arumugam

Post a CommentNewer Post Older Post Home

Blogger Template by Blogcrowds